212 பேருடன் பயணித்த விமானம் விபத்து

ஞாயிறு நவம்பர் 01, 2015

எகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.  குறித்த விமானத்தில் 212 பேர் பயணித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

 

எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

 

செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி 17 குழந்தைகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

 

இந்தநிலையில் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள எகிப்து அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 

அவற்றில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடலை ஆய்வு செய்த பின்னர், அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியதா? என்ற விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.