231 கிலோ கிராம் மஞ்சளுடன் இருவர் கைது

புதன் நவம்பர் 25, 2020

புத்தளம் பாலாவி புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் அநுராதபுரம் வீதியில் அமைந்திருக்கும் அரிசி ஆலையொன்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, கெப் ரக வாகனத்தில் 8 மூடைகளில் 231 கிலோ உலர்ந்த மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக, புத்தளம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேற்படி  மஞ்சள் கற்பிட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதாக,  விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.  

இதன்போது, புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.