25 மாணவர்களுக்கு எதிராக முறைப்பாடு!

புதன் ஜூன் 13, 2018

யாழ். கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

யாழ். காவல் துறை  நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று 13ம் திகதி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.  அந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் காவல் துறை  நிலையத்திற்கு அழைத்து விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் துறையினர் தெரிவித்தனர்.