`25 வயதைவிட 63-ல்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!' !

புதன் மே 22, 2019

 ளமைக் காலத்தைவிட முதுமையில்தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், `25 வயதில் தனக்கிருந்த உற்சாகமும் உத்வேகமும் 63 வயதில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது' என்றார்.  அப்போது, தன்னுடைய இந்த அதீத மகிழ்ச்சிக்கு நான்கு முக்கியமான காரணங்கள் உண்டு' என்று கூறியுள்ளார். 

பில்கேட்ஸ் சொன்ன அந்த நான்கு முக்கியக் காரணங்களைப் பார்ப்போம்.

``* செய்யும் வேலையில் நேர ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே, தேவையில்லாத மன உளைச்சல்களைத் தவிர்க்கலாம். இது சாத்தியப்பட வேண்டும் என்றால், மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும். 25 வயதில் நேர ஒழுக்கத்தைப் பின்பற்றுவது பெரிய விஷயம் இல்லை. அதை 63 வயதிலும் சரியாகப் பின்பற்ற வேண்டும். நான் அப்படித்தான் பின்பற்றியிருக்கிறேன். அதை சாத்தியப்படுத்திய வகையில், முன்பைவிட இப்போது நான் அதிக மகிழ்ச்சியாக உள்ளேன்.

* உதவும் மனப்பான்மை அதிகரிக்க அதிகரிக்க, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். அந்த வகையில், நான் பலருக்கும் உதவி செய்துள்ளேன். உதவி என்பது எல்லா நேரமும் பொருளாதாரம் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனத்தளவில் தடுமாற்றத்தில் இருப்பவர்களை நல்வழிப்படுத்துவது, தவறுக்கு எதிராகக் குரல்கொடுத்து, நல்லவருடன் துணை நிற்பதுமாகும். மேலும், மனரீதியாகத் துவண்டுபோய் இருப்பவருடன் நேரம் ஒதுக்கிப் பேசுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பில்கேட்ஸ்

* உடல், மனம் இவை இரண்டையும் முறையாகக் கவனித்துக்கொண்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்த வகையில், நான் என் மகிழ்ச்சிக்காகத் தினமும் உடற்பயிற்சி செய்துவருகிறேன். டென்னிஸ், தியானம், ட்ரெட் மில் என என்னுடைய உடற்பயிற்சியை மாற்றி மாற்றி அமைத்துக்கொள்வேன்.

* குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுபவர்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நானும் அப்படித்தான். என் வாழ்க்கையில், மற்றவற்றுக்கு நான் செலவிடும் நேரத்தைவிட குடும்பத்தினருக்கே அதிக நேரம் செலவிடுவேன்.

இன்றுவரை நான் உற்சாகமாகவும் உத்வேகத்துடனும் இருக்க இவைதான் மிக முக்கியமான காரணங்கள்" என்று கூறியுள்ளார் பில்கேட்ஸ்.