3 சிறீலங்கா நாட்டவர் ஓமான் படையினரால் மீட்பு!

ஞாயிறு பெப்ரவரி 05, 2017

கஷாப் துறைமுகம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் சிக்கியிருந்து மூன்று சிறீலங்கா நாட்டவர்களை ஓமான் விமானப்படையினர் உலங்குவானூர்திமூலமாக மீட்டுள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாக குறித்த கப்பலிலிருந்து மாலுமிகள் உதவிக்குக் கோரிக்கைவிடுத்திருந்தனர். இதனையடுத்து றோயல் விமானப்படையின் உலங்குவானூர்தி விரைந்துசென்று மூன்று சிறீலங்கா நாட்டவர்களை மீட்டுள்ளதாகவும் ரைம்ஸ் ஒவ் ஓமான் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவர்கள் மீட்கப்பட்டு கஷாப் விமானநிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.