3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறையில் மம்மிகள், சிலைகள் மீட்பு

April 20, 2017

எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மம்மிகளுடன் மரத்தினாலான வண்ணப் பெட்டிகள், இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள், பாண்டங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அங்கு தொடர்ந்தும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேலும் பல மம்மிகள் கண்டெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்தில் பிரபலம் வாய்ந்த ”Valley of the Kings” என்ற பகுதி அருகேயுள்ள கல்லறையிலேயே மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
புதன் April 26, 2017

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்

ஞாயிறு April 23, 2017

புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.