39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு!

புதன் அக்டோபர் 23, 2019

பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை காவல் துறையினர்  மீட்டுள்ளனர்.

எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை காவல் துறையினர்  மீட்டுள்ளனர்.

பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை காவல் துறையினர்  மீட்டுள்ளனர்.

வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள காவல் துறையினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.