400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை!

March 09, 2018

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

22-வது பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாட்டியாவில் நடந்தது. இதன் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 

அத்துடன் அவர் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஆபிரகாம் 49.94 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சந்தோஷ்குமார் 50.14 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ராமச்சந்திரன் 51.61 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். 

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதன் செப்டம்பர் 12, 2018

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி  இன்று டெல்லியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை