50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் 5 ஜி!

ஒக்டோபர் 27, 2017

உலக மாற்றுத்திறன் கலைஞர்கள் சங்கத்தின் மூலமாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் ‘5ஜி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்கள். பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் (FIDAAWA) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது. இந்த சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் ‘5ஜி’ என்ற படத்தை (FIDAAWA ) அமைப்பின் சார்பில் தயாரிக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்த மாற்றுத்திறன் கலைஞர் கே.பி.ராஜபாலாஜி.எம்.ஏ இந்த திரைப்படத்தினை இயக்க உள்ளார். உலக மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து மனித நேயத்தை உருவாக்கவே இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

இந்த படத்தில் தமிழ் திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தங்களின் மனிதநேயத்தை வெளிபடுத்த இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படம் பற்றிய முழு விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. உலக மாற்றுத்திறனாளிகளின் தினமான டிசம்பர் 3 அன்று இந்த திரைப்படம் துவங்க உள்ளது.

செய்திகள்
வெள்ளி நவம்பர் 10, 2017

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.

திங்கள் நவம்பர் 06, 2017

கனடியத் தமிழ்ப் பெண் "ஜெசிக்கா ஜூட்" இன் எழுச்சிக் குரலில், கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில்