50 நாட்குளுக்கு பின் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்

ஞாயிறு ஓகஸ்ட் 01, 2021

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் சுமார் 50 நாட்டுகளுக்கு பின் இன்று (01) முதல் சுகாதார பொறிமுறைகளுக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மே மாதம் 11 திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த பயணக்கட்டுப்பாடு மே 30 வரை மீண்டும் நீடிக்கப்பட்டு பல தடைவைகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

இந்நிலையில் அரசாங்கம் தற்போது அரச ஊழியர்களை வழமைப்போல் பணிக்கு அழைத்துள்ளது.

இந்நிலையில் நெரிசல் நிலையினை குறைப்பதற்காக நாடளாவிய ரீதியில் பஸ் மற்றும் புகையிரத சேவை 75 சதவீத பயணிகளுடன் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மலையகப் பகுதியிலிருந்து வெளி மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் அலுவலக மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பஸ் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளுக்கின்றி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.