500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்

January 06, 2017

கடைகோடி ஏழையின் சிறு சேமிப்பைத் திருடிக் கொண்டிருக்கிறது பா.ச.க மோடியின் கூடடம் . ஒருபுறம் சுரண்டல், மறுபுறம் அதிகார வரம்பு மீறல், நாளொரு வண்ணம் புதிய கேலிக்கூத்தான அறிவிப்புகள், அறிவிப்புகளை திரும்ப பெறுதல்  என மக்களின் அன்றாட வாழ்க்கையை சிதைத்து போட்டுள்ளது  மோடியின் அதிகாரம். 

  இந்த மிகப்பெரிய  பொருளாதாரச் சுரண்டலை முழுமையாக  புரிந்து கொள்ளவும், நம் பணத்தின் மீதான நம் உரிமைக்காக கேள்வி எழுப்பவும்  அது குறித்தான முறையான அறிவுத் தேடலை எதிர் நோக்கியிருக்கிறோம். 

இதற்காக வரும் சனவரி 7 ஆம் நாள் சனிக்கிழமை சென்னையில் "செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும் " என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக  ஒரு அரங்காக கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளோம். 

இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

நேரம்: மாலை 5 மணி
நாள்: 7 சனவரி 2017 சனிக்கிழமை
இடம்: பனுவல் நூல் நிலையம், திருவான்மியூர், சென்னை
தொடர்பு : 8939661119, இளந்தமிழகம் இயக்கம்

உரை:
திரு. மு. நாகநாதன்  
பொருளியல் துறை பேராசிரியர் (ஓய்வு) சென்னை பல்கலைக்கழகம்
திரு. தாமஸ் ஃபிராங்கோ - தலைவர், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
திரு. நரேன் ராஜகோபாலன்
திருமதி. சுசீலா ஆனந்த்
திரு. இசையரசு
திரு. வெங்கட், ஆராய்ச்சி மாணவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
தோழர். வசுமதி ராஜமார்த்தாண்டன், ஐ.டி ஊழியர், இளந்தமிழகம் இயக்கம்  
தொகுப்பாளர்: தோழர் அ. மு. செய்யது, இளந்தமிழகம் இயக்கம் 
செல்லாக்காசு குறித்து மக்களின் குரல்  - களநிலவர காணொளித் தொகுப்பு 

நன்றி: தோழர் தயாளன் சண்முகா

இணைப்பு: 
செய்திகள்