6 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கிறது இந்தியா!

Saturday December 02, 2017

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதியில் சீனா தனது ராணுவ வலிமையை வலுப்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதம் தாங்கி செல்லும் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணியை இந்தியா துவங்கியுள்ளது.  

இதுபற்றி இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் பணி துவங்கி விட்டது. இது மிகவும் ரகசிய திட்டமாகும். எனவே, அதற்கு மேல் எதுவும் என்னால் கூற முடியாது. நமது கடல் பகுதியில் உள்ள பாதுகாப்பு சூழல் குறித்து நாங்கள் கவனத்துடன் உள்ளோம்.

அணு சக்தியில் இயங்கும்  நீர்மூழ்கிக் கப்பல்கள், நம் நாட்டின் தாக்குதல் திறனை வெகுவாக உயர்த்தும். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து, கூட்டமைப்பை உருவாக்க உள்ளன. இந்தியா - பசிபிக் பிராந்தியத்தில் அவசர கால தேவை எழும்போது, நம் கடற்படையின் தயார் நிலையை பிரதிபலிக்கும் வகையில், நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்படும். 

நம்முடைய கடற்பகுதியில் உள்ள தற்போதைய சூழ்நிலையை அனைவரும் அறிவோம். கடற்பகுதியில் தொடரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க நிலையான கவனம் மற்றும் வலுவான தடுப்பு நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.