64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை

வியாழன் அக்டோபர் 29, 2020

புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக, 64 ஏக்கர் காணியானது, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்திடம் பகிரப்பட்டுள்ளது.

புத்தரமுல்லையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சில் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஹொரனை- மில்லேவ பிரதேசத்தில் உள்ள நகர அபிவிருத்தி சபைக்குரிய இடமே இவ்வாறு, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்திடம் பகிரப்பட்டுள்ளது.

இதன்கீழ், 5 புதிய மருந்து உற்பத்தி நிறுவனங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் 2 வருடங்களில் நிறைவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.