64 வயதாக மாற்றப்பட்ட ஓய்வூதிய காலத்தை மீண்டும் 62 வயதாக மாற்றம்!

திங்கள் சனவரி 13, 2020

டிசம்பர் 5ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு இறுதியாக அரசு செவிசாய்த்துள்ளது.
 
ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனையை மாத்திரம் செவி சாய்த்துள்ளது.

62 வயதில் இருந்து 64 வயதாக மாற்றப்பட்ட ஓய்வூதிய காலத்தை, மீண்டும் 62 வயதாகவே மாற்றியுள்ளதாக பிரதமர் எத்துவார் பிலிப் (Edouard Philippe) அறிவித்துள்ளார்.
 
வேலை நிறுத்தம் ஆரம்பித்து இன்று 40 நாட்கள் ஆன நிலையில், அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

நான் குறுகிய கால நடவடிக்கையாக, கோரிக்கையின் ஒரு பகுதிக்கு தயாராகிறேன்.அதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன். குறைந்தது 2027 ஆம் ஆண்டு வரையான காலத்திற்கு இந்த வயது வரம்பு குறைப்பு தொடரும். என எத்துவார் பிலிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.