65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

April 13, 2018

 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது. 

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்த படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. 

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை, மாம்(பின்னணி இசை))

சிறந்த மலையாள படம் - தொண்டிமுத்தலும் த்ரிக்சக்‌சியும்

சிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா

சிறந்த இந்தி படம் - நியூடன்

சிறந்த நடிகை (சிறப்பு பிரிவு) - பார்வதி மேனன் 

ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி-2 

செய்திகள்
ஞாயிறு April 08, 2018

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

வியாழன் April 05, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.