69 குழந்தைகள் பெற்ற பெண் மரணம்

வெள்ளி மார்ச் 03, 2017

69 குழந்தைகளைப் பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் காலமானதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 69 குழந்தைகளைப் பெற்றேடுத்த பாலஸ்தீன பெண், 40 வயதிலேயே இறந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் இறந்ததை அவர் கணவர் உறுதிபடுத்தியுள்ளார். ஒரு பெண் இத்தனைக் குழந்தைகளைப் பெற்றேடுத்தது இது முதல் முறை அல்ல. ரஷ்யாவை சேர்ந்த வாஸில்யேவா என்ற பெண்ணும் 69 குழந்தைகளைப் பெற்றேடுத்து கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.

இந்த ரஷ்யப் பெண், மொத்தம் 27 முறை கர்ப்பமடைந்துள்ளார். அதில் 16 முறை இரட்டையர்களையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், நான்கு முறை 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.