6ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டம்!

வெள்ளி மே 17, 2019

எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம் என்ற எமது தேசியத்தலைவரின் சிந்தனையுடன் ஆரம்பமாகியது இன்றைய (16) 6ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டம். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதிகேட்டும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் உறவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் 5நாட்களைக் கடந்து இன்று 6வது நாளாக பிரித்தானியாவில் நடைபெற்றுவருகின்றது. 

வழமைபோல் காலை10 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடரினை திரு தெய்வேந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான சுஜீவன், பிரதீபன், பாலகிருஷ்ணன்,சண்முகநாதன், பாலகுமரன், வெற்றிக்குமரன், அருளிசா ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்தனர்.