7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை!

செவ்வாய் நவம்பர் 13, 2018

பேரறிவாளன் உட்பட 7 பேரை தெரியாது என்று கூற நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார். 

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சியா என்று கேட்டதற்கு எந்த 7 பேர்,  எனக்கு தெரியாது, பாஜக ஆபத்தான கட்சியாக பார்த்தால் அப்படித் தான் என்று கூறினார். 

எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. 

பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும்.