7 வது நாளை கடந்து யேர்மன் தலைநகரை அண்மிக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

May 17, 2017

தமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 7 வது நாளாக இன்று காலை Bielefeld நகரையும் மாலை Hannover நகரையும் ஊடறுத்து தலைநகர் பேர்லினை நோக்கி பயணிக்கின்றது. இன்றைய நாளில் Bielefeld மற்றும் Hannover நகரில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கண்காட்சி பதாதைகளை நிறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கி சிறிய உரையாடல்களின் ஊடாகவும் தமிழின அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

அத்தோடு  Bielefeld  நகரினில் நகர முதல்வரின் அலுவலகத்தில் மனுக்கையளிப்பும் அத்தோடு நகர பல்லின மக்களுக்கான ஒருங்கிணைப்புச் சபையின் பொறுப்பாளர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றது இனவழிப்பு என அங்கீகரிக்க கோரியும் மனு கையளிக்கப்பட்டது. நாளைய தினம் பேர்லினில் Brandenburger Tor முன்பாக கண்காட்சி வைக்கப்பட்டும் , இறுதியாக வெளிவிவகார அமைச்சில் முக்கிய சந்திப்பும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...