7 போ் விடுதலை - மீண்டும் வலியுறுத்தும் ராமதாஸ்

வெள்ளி ஜூலை 24, 2020

உயா்நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலாவது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் விடுதலை குறித்து ஆளுநா் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை காலத்தைக் கடந்தும் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழா் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநா் மாளிகை தேவையற்ற தாமதம் செய்வது குறித்து உயா்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணா்வுகள் மிகவும் முக்கியமானவை. ஆளுநா் விரைந்து முடிவெடுக்காவிட்டால் உயா்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமென நீதிபதிகள் விடுத்துள்ள மெல்லிய எச்சரிக்கையை, ஆளுநா் மாளிகை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் இந்திய விடுதலை நாளுக்குள் அவா்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கும் வகையில் ஆளுநா் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.