70 வயது முதியவராக மாறிய ஆர்.கே.சுரேஷ்

நவம்பர் 29, 2017

தயாரிப்பாளராக இருந்து நடிகராக வலம் வரும் ஆர்.கே.சுரேஷ், ஒரு படத்திற்காக 70 வயது முதியவராக மாறியிருக்கிறார். சலீம், தர்மதுரை படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் ‘மருது’ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். 

அதை தொடர்ந்து ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’, ‘தனிமுகம்’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதேசமயம் விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட சில படங்களில் வில்லன் வேடத்தையும் தொடர்ந்து வருகிறார்.

தற்போது ஆர்.கே.சுரேஷ் மலையாள படத்தில் 70 வயது முதியவராக நடிக்கிறார். முதன்முறையாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள ஆர்.கே.சுரேஷ், ‘சிகாரி சாம்பு’ என்கிற படத்தில் தான் இப்படி ஒரு கெட்டப்பில் நடிக்கிறார். 

அதுமட்டுமல்ல, இப்படத்தில் 25 வயது இளைஞராகவும் நடிக்கிறார். குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் ஷிவதா நாயர் கதாநாயகியாக நடிக்க, ‘ஆர்டினரி’ புகழ் சுகீத் இந்தப்படத்தை இயக்குகிறார்.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.