70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி

வியாழன் அக்டோபர் 21, 2021

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி வல்ஜிபாய் ரபாரி (வயது 75). ஜிவுன்பென் ரபாரி (70), இந்த தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பிய அவர்கள் செயற்கை கருத்தரிப்பு மையத்தினை அணுகினர்.

இந்நிலையில் ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். வயதான நிலையிலும் குழந்தை பெற்ற அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், குழந்தையுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

 

இரட்டை குழந்தைகள்

 

இதற்கு முன்னதாக, 2019-ம் ஆண்டில், ஆந்திராவை சேர்ந்த 74 வயதான மங்கையம்மா என்பவர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.