8 இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

வெள்ளி சனவரி 11, 2019

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த இரண்டு தடவைகளில் எட்டு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா  கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

கடந்த 7 ஆம் திகதி நான்கு மீனவர்களும் ஒரு படகும் மறுநாள் 8 ஆம் திகதி நான்கு மீனவர்களும் ஒரு படகும் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டிருந்தனர்.