8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா

April 14, 2017

அதர்வா அடுத்தாக 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குனருடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘8 தோட்டாக்கள்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷுக்கு திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். 

இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அடுத்தாக அதர்வாவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. அதர்வா தற்போது தனது சொந்த தயாரிப்பில் ‘செம போத ஆகாதா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. 

ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அடுத்தக்கட்டமாக கதாநயாகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வை படக்குழுவினர் நடத்தவுள்ளனர். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

 11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த  இரும்புத்திரை  படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது