96 பட இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி!

வெள்ளி பெப்ரவரி 01, 2019

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 96 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வரவேற்பை பெற்ற படம் 96. ராமாக நடித்து இருந்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. 

விஜய் சேதுபதி ஒரு தீவிர பைக் பிரியர். முக்கியமாக் புல்லட் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமாருக்கு விஜய்சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் வாங்கி பரிசாக அளித்துள்ளார். இந்த புல்லட் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது.

புல்லட் வாங்கிக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதி வெண்ணையும் வாங்கி கொடுத் துள்ளார் விஜய் சேதுபதி.