97 சதவீதமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

புதன் மே 15, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 97 சதவீதமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பகல் மல்வத்து பீடாதிபதி அஸ்கிரி மகாநாயக்கரை சந்தித்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரே இன்னும் கைதுசெய்யப்படாமல் இருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்துக்கு உதவியவர்களும் தீவிரவாதிகளாக கருதப்பட்டு கைதுசெய்யப்படுவர் என்றும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண சுதந்திரம், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.