அச்சு ஊடகங்களுக்கு வரிக்குறைப்பு உண்டா

வியாழன் செப்டம்பர் 17, 2020

 அச்சு ஊடகங்களுக்கு வரிக்குறைப்பு உண்டா?

வைகோ கேள்விக்கு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துமூலம் விளக்கம்
 
கேள்வி எண் 96

கீழ்காணும் கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) செய்தித்தாள்கள் அச்சிடுதல் மற்றும் விற்பனைத் தொழிலில் ஏற்பட்டுள்ள  இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, சுங்க வரிக் குறைப்பு செயுமாறு கேட்டு  அச்சு ஊடகங்களின் சார்பில், அரசுக்குக் கோரிக்கை வந்துள்ளதா?

(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் விளக்கம் என்ன?

(இ) வானொலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, உரிமக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுமா?

(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விளக்கம் தருக?

செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்து இருக்கின்ற விளக்கம்,

அ,ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்

மார்ச், ஏப்ரல் மாதங்களில், இந்திய அச்சு ஊடகக் குழுமங்களிடம் இருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 

வருவாய் இழப்பு காரணமாக, அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு  5 விழுக்காடு அடிப்படை சுங்க  வரியை நீக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்கள். 
இதுகுறித்து, நிதி அமைச்சகத்துடன் கலந்து பேசி, உரிய முடிவு எடுக்கப்படும்.

இ, ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்

கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தனியார் பண்பலை வானொலிகளுக்கு, 2020/21 ஆம் ஆண்டுக்கான, முதல் மூன்று மாத கால உரிமத் தொகைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.