ஆசிரியர் நிசானின் பிறந்த நாள் நினைவு வாசிப்பு முகாம்

சனி ஓகஸ்ட் 06, 2022

இன்று {6}   ஆசிரியர் நிசானின் பிறந்த நாள் நினைவாக பூநகரி  வாடியடி சந்தி ஆலமர நிழலில் வாசிப்பு முகாம் இடம்பெற்றது.

v

பூநகரியை பிறப்பிடமாக கொண்ட  ஆசிரியர் நிசான் .பூநகரி  ஒருங்கிணைந்த அபிவிருத்தி அறக்கட்டளை செயற்பாட்டிற்கு பலவழிகளில் உறுதுணையாக செயற்பட்டார்.

1

அண்மையில் இடம் பெற்ற பேருந்து விபத்தில் ஆசிரியர் நிசானின்  உயிர் காவு கொள்ளப்பட்டது.

பூநகரியிலுள்ள கிராமங்கள் தோறும் சிறுவர்கள் மற்றும்  பெரியவர்களிடத்தில் வாசிப்பில்  ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தின் முதற்கட்டமாக  பூநகரி  ஒருங்கிணைந்த அபிவிருத்தி அறக்கட்டளை இவ் வாசிப்பு முகாமை ஒழுங்குபடுத்தியது.

ஆசிரியர் நிசான் நினைவாக  நிசானின் பெரிய தாயார் திருமதி றீட்டம்மா பிரான்சிஸ் அவர்களால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

ஆசிரியர் நிசானின் சகோதரனும் இவ் வாசிப்பு முகாம் செயற்பாட்டில் கலந்து கொண்டார்
 
 சிறப்பு அதிதியாக எழுத்தாளர் வெற்றிச் செல்வி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் பற்றி கருத்துக்களை வழங்கினார்.

 வாசிப்பு முகாமில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர்கள்  வெற்றியீட்டி பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்.