ஐ.நா சிறப்பு பிரதிநிதி சிறீலங்காவுக்கு விஜயம்!

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது அவர் அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.