ஐ.நா வில் விளக்கமளித்துள்ள இலங்கை பிரதிநிதிகள்

புதன் ஜூன் 26, 2019

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் பிரதிநிதிகள், மனித உரிமைகள், தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக நேற்று விளக்கமளித்துள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது அமர்வு இடம்பெற்று வருகிறது. கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலி பெச்சலெட், இலங்கையின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கரிசனை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இலங்கையின் பிரதிநிதிகள் நேற்று பேரவைக்கு விளக்கப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஏப்ரல்21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்த பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம் தெரிவித்துள்ளது.