ஐ.நா.வுக்கு சொந்தமான வாகனம் மீது கைக்குண்டு வீச்சு!

ஞாயிறு நவம்பர் 24, 2019

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில்வெளிநாட்டுப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக இரண்டு ஆப்கானிஸ்தானிய இராணுவத்தினர் உட்பட மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காபூலில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.