ஐந்து விதமான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை!!

சனி மே 09, 2020

இத்தாலியிலுள்ள ரோம் நகரின்,ஸ்பலன்சானி தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் ஐந்து விதமான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

எலிகளின் மீது நடத்தப்படும் இந்த சோதனைகளில், சில நல்ல பலனை தந்திருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எலிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்தியபோது,சில எலிகளின் உடலில் கொரோனா வைரசை எதிர்க்கும்'ஆன்டிபாடி'கள் உருவாயின.

இந்த ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸ்கள் எலிகளின் செல்களில் தொற்றிவிடாத வண்ணம் வெற்றிகரமாக தடுப்பதாக ஸ்பலன்சானி மருத்துவமனை அதிகாரிகள்,'டிவி'சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

டாகிஸ் என்ற மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசிகளை தயாரிக்கஉள்ளது. எனினும் எலிகள் மீது வேலை செய்த அளவுக்கு மனிதர்கள் மீதும் இந்த தடுப்பூசி பலன் தருமா என்பதை அடுத்த சில வாரங்களில் சோதிக்கவுள்ளதாக ரோம் நகர மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.