ஐஒஎஸ் 14 இல் அறிமுகமாகும் அசத்தல் புதிய எமோஜிக்கள்

சனி ஜூலை 18, 2020

அப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 14 இயங்குதளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜனவரி 2020 வாக்கில் யுனிகோட் எமோஜி 13.0 வெளியிட்டு பல்வேறு புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்தது. இவற்றை நிறுவனங்கள் தங்களது தளங்களில் அறிமுகம் செய்து செயலி மற்றும் இயங்குதளங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

பொதுவாக ஒவ்வொரு இயங்குதளம் மற்றும் பிளாட்ஃபார்ம்களுக்கு ஏற்ப டெவலப்பர்கள் எமோஜிக்களை மாற்றியமைத்து வழங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 14 இயங்குதளத்தில் புதிதாக 16 எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. 

 

மெமோஜி

 

அப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை 14.1 அல்லது 14.2 வெர்ஷன்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் தனது ஐஒஎஸ் 13.2, ஐஒஎஸே 12.1 மற்றும் ஐஒஎஸ் 11.1 வெர்ஷன்களில் புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்து இருந்தது.  

புதிய எமோஜிக்கள் பட்டியலில் கொரோனாவைரஸ் பாதிப்பு சார்ந்து எந்த எமோஜியும் இடம்பெறவில்லை. வழக்கமாக புதிய எமோஜிக்களை சமர்பித்து அவற்றை போன்களில் சேர்ப்பதற்கு யுனிகோட் அனுமதி வழங்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.  

எனினும், ஆப்பிள் நிறுவனம் மெமோஜியில் புதிதாக ஹெட்வியர் மற்றும் ஃபேஸ் மாஸ்க் உள்ளிட்ட கஸ்டமைசேஷன் வழங்குகிறது. இதனை ஐஒஎஸ் மெசேஜிங்கின் போது ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும்.