ஐஸ்கிறீமில் கொரோனா!

திங்கள் சனவரி 18, 2021

சீனாவில் ஐஸ்கிறீமானது, கொரோனா வைரஸூடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்தவகையில், தியான்ஜின் தகியாடாவோ உணவு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தொகுதிகளுடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடியவர்களை, வட சீனாவின் தியான்ஜின் மாநகர சபையின் தொற்றலுக்கு எதிரான அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதேவேளை, இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சீலிடப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனமானது, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா, உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மோர் ஆகியவற்றில் இருந்து ஐஸ்கிறீமை உற்பத்தி செய்கின்றது என, வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.