ஐ,தே,க ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எமது கட்சிக்கு சாதகம்!

புதன் செப்டம்பர் 11, 2019

ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எமது கட்சிக்கு சாதகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச எந்த கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினாலும், தேர்தலின் முடிவின் போது அவர் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளராகவே காணப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.