ஐவன் பேதுருப்பிள்ளை பிரித்தானியாவில் காலமானார்!

புதன் ஏப்ரல் 29, 2020

பிரித்தானியாவில் வசித்து பல வகைகளில் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஆங்கில எழுத்தாளர் திரு ஐவன் பேதுருப்பிள்ளை அவர்கள் நேற்று (28.04.2020) விம்பிள்டனில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84.

London Royal Dutch Shell கம்பனியில் நீண்டகாலமாக உயர் பதவி வகித்து வந்த இவர், இலண்டன் Tamil Writers Guild இன் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவராவார்.

இலங்கை பல்கலைக்கழக பட்டதாரியான இவர், 2009 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரைகள் Sri Lanka – Where was the World? என்ற நூலாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.