அஜித் பிரசன்னவிற்கு பிணை

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி வழக்கு ஒன்றின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்னவை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியன்த பெர்ணான்டோ மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணை அடிப்படையிலும் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதன் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது