அக்கரைப்பற்றில் வரவ செலவுத்திட்டம் நிறைவேற்றம்

வெள்ளி டிசம்பர் 03, 2021

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த  அமர்வு, பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் நேற்று (02)  நடைபெற்றது. இதன் போது பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவ செலவுத்திட்டம் (பட்ஜெட்)  பொதுச்  சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

தேசிய காங்கிரசின் சார்பில் தவிசாளர், உப தவிசாளர் அடங்களாக ஐந்து உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இரண்டு உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 08 உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த சபையின் வரவு- செலவுத்திட்டம் இம்முறையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.