ஆகஸ்ட் 19 முதல் திகதி புலம்பெயர் தேசமெங்கும் மேதகு 2 திரைப்படம் வெளியாகிறது

சனி ஜூலை 30, 2022

 தமிழின தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் அதனூடு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும் சொல்லிய திரைப்படமான மேதகு 1 கடந்த ஆண்டு வெளிவந்து மக்களிடம் பெருவரவேற்பைப் பெற்றது

அதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 19 முதல் திகதி புலம்பெயர் தேசமெங்கும் மேதகு 2 திரைப்படம் வெளியாகிறது, அத்துடன் www.tamilsott.com என்ற இணையத்திலும் மேதகு திரைப்படத்தைப் பார்வையிடலாம். 

தமிழீழப் போரியல் வரலாற்றின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் மேதகு திரைப்படத்தை தமிழர்கள் எல்லோரும் பார்வையிட்டு தொடர்ந்தும் ஈழவரலாற்றைப் பதிவு செய்ய ஆவன செய்யுமாறு மேதகு திரைக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இது மேதகு திரைப்படத்தில் இடம் பெறும்பாடல் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டது.