அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் யாழ்ப்பாணம் விமான சேவை சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

வியாழன் அக்டோபர் 17, 2019

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

இன்று காலை திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் என்ற பெருமையினை இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமானம் பெற்றுள்ளது.அத்துடன் அலையன்ஸ் எயார் விமானமே யாழ்- சென்னைக்கான விமான போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளது.அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் சென்னை -யாழ்ப்பாணம் விமான சேவை இன்று சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.