அழியும் விளிம்பில் கண்ணீர் விடும் ஆமை!

ஞாயிறு ஜூன் 02, 2019

உலகில் உருவான விலங்கினங்களிலேயே மிகவும் பழமையான விலங்கினம் என்றால் அது கடல் ஆமை தான். கிட்டதட்ட 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதே காலத்தில் உருவான டைனோசர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டது.

தற்போது கடல் ஆமைகளும் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளது. அதற்கு மனிதனும் ஓர் காரணம். சூழலை மாசுப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றான் மனிதன். கடல் போன்றவற்றில் கலக்கும் பொருட்கள் கடல் உயிர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடுகின்றது.

ஆமை ஒன்று கடலில் உள்ள கழிவில் சிக்கி நீந்த முடியாமல் தவிக்கின்றது. இவ்வாறு மனிதர்களின் செயல்பாட்டினால் ஆமை அழிந்து வருகிறது. இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி முறை, கடுமையான கடல் மாசுபாடு, கடற்கரை ஆக்கிரமிப்புகளால் கடலாமைகள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.

இனியும் இப்படி தொடர்ந்தால் கடல் ஆமைகள் அழியும் விளிம்பில் நிற்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் போய் அழிந்து விட்டது என்று சொல்லும் காலம் வந்துவிடும்.