அளுத்கமவின் 8 கிராமசேவையாளர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

சனி நவம்பர் 21, 2020

 அளுத்கமவின் 8 கிராமசேவையாளர் பிரிவுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.  நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் போது அளுத்கமவில் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அளுத்கமவின் பண்டாரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போது நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் மிலானியாவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் நான்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்தே இந்த பிசிஆர் சோதனை இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

17 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து எட்டு கிராமசேவையாளர்கள் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.