அமைச்சர் றிசாட்டுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

புதன் மே 22, 2019

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லாபிரேரணை தொடர்பாக எடுத்த எடுப்பிலே பிரேரணையக்கு ஆதரவாக தமிழ்தேசியகூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என்பது உணர்வுபூர்வமான தமிழ்மக்களின் சிந்தனை அல்லது எண்ணம்  ஆனால் இந்த விடயத்தை ஆழமாக தூரநோக்குடன் சிந்திக்கவேண்டும் தமிழ்தேசியகூட்டமைப்பு எப்போதும் சிறுபான்மைகட்சிகளை சேர்ந்தவர்களுக்கு எதிராக பெரும்பான்மை கட்சிகள் செயல்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுத்தவரலாறுகளே உள்ளன.

அமைச்சர் றிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பித்தவர் மகிந்தவின் செல்லப்பிள்ளை விமல் வீரவன்ச அவரின் நோக்கம் இந்த இக்கட்டான தமிழ் முஷ்லிம் விரோத போக்கை வைத்து அதில் குளிர்காய்ந்துவிடலாம் என்பதே,

சரி றிஷாட்டுக்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பு வாக்களித்தால் அதில் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக என்னலாபம் உண்டு. முடிந்தால் ஒரு இனவாதி றிஷாட்டை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டோம் என்ற மகிழ்ச்சிமட்டுமே தமிழருக்கு இருக்கும் இதனால் வேறு எந்த அரசியல் ரீதியான நன்மையும் எமக்கில்லை.

றிஷாட் தொடர்பாக கடந்த காலம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக செயல்பட்டவர்,
அரசியல் தீர்வை எதிர்த்தவர், தமிழ்தேசியகூட்டமைப்பு எடுத்த சகலமுடிவையும் எதிர்த்தவர் இப்படி பல குற்றச்சாட்டுக்கள் உண்டு இதற்காக பழிவாங்குவதற்கு இது நல்ல சந்தர்பம் என எமது மக்கள் பலர்குறிப்பிடுவது நியாயம்தான்

ஆனால் அதற்காக அவரை பழிவாங்குவதால் எதிர்கால நன்மை அரசியல் ரீதியாக தீர்வுத்திட்டம் தொடர்பாக நமக்கு ஏதும் லாபம் வருமா? அறவே இல்லை றிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் நன்மைகள் வரும் என்பதை நான் சொல்லவில்லை இருந்தும் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஷ்லிம் தலைவர்களுடன் முஷ்லிம்மக்களுடன் பேசும்போது தமிழ்தேசியகூட்டமைப்பு எப்போதும் முஷ்லிம் மக்களை முஷ்லிம் அரசியல் வாதிகளை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றியவர்கள் என்ற வரலாறு உலக அளவில் பதியப்படும்,

தமிழ்தேசியகூட்டமைப்பு அரசியல் சித்தாந்தம் என்பது தூரநோக்குடன் அரசியல் பணி செய்வது குறுகிய உணர்ச்சி அரசியல் போல் கற்பூரம் எரிவதை போல் செயல்பட முடியாது. இதில் பல விமர்சனங்கள் எமக்கு வரும் அதற்கு முகம் கொடுத்து மக்களை தெளிவுபடுத்துவதே இன்றய தேவை.