அமைச்சர்களின் வெளிநா்ட்டுப் பயணம் சுற்றுலாவாக தெரிகிறது!

வியாழன் செப்டம்பர் 05, 2019

ஆட்சி காலம் முடியும் நிலையில் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் சுற்றுலா பயணமாக தெரிகிறது என்று திருமாவளவன்  கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டதால் வட மாநிலத்திலிருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தை பொருத்து உணவு பொருட்களை வழங்க வேண்டும். இது மத்திய- மாநில அரசுகளுக்கு இத்திட்டம் சிக்கலாகும். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என எச். ராஜா கூறியிருக்கிறார். மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதனடிப்படையிலேயே எச். ராஜா பேசியிருகிறார்.

முக ஸ்டாலின்

ரஜினிகாந்த் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வருகிறது. முதலில் புதிய தலைவர் யாரென்று அறிவிக்கட்டும் பின்னர் அது குறித்து பேசுகிறேன். சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திடீரென அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்யவில்லை. ஆட்சி காலம் முடியம் நிலையில் அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் நடக்கிறது. எனவே இது அரசு செலவில் சுற்றுலா பயணமாக செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் சுற்றுப் பயணம் செல்வது தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.