அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிகா நீக்கம்!

வெள்ளி சனவரி 17, 2020

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் வெற்றிடத்துக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.