அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியாவிற்கு விஜயம்

ஞாயிறு ஜூலை 25, 2021

இந்திய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் Antony Blinken அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது பிரதமர் மோடியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்தனி Antony Blinken ஒன்றையும் நடத்தவுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமொன்றும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நீர்மூழ்கிக் கப்பல்களை தகர்க்கும் வல்லமையுடைய மூன்று போர் விமானங்களை இதுவரை அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் கூறியுள்ளார்.