அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் நவோமி ஒசாகா

ஞாயிறு செப்டம்பர் 13, 2020

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.

முதல் செட்டை 6-1 என அஸ்ரென்கா எளிதில் கைப்பற்றினார். இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நவோமி ஒசாகா 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக 2-வது செட்டை 6-3 என ஒசாகா கைப்பற்றினார். 

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் நவோமி ஒசாகாவின் கையே ஓங்கியது. இதனால் அந்த செட்டையும் 6-3 எனக் கைப்பற்றி 1-6, 6-3, 6-3 என அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.