அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நம்பிக்கையில் ஆஸ்திரேலியர்கள் 

திங்கள் சனவரி 25, 2021

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொன்ல்ட் டிரம்ப்-ன் குடியேற்ற எதிர்ப்புப் பார்வை பல நாட்டவர்களைப் பாதித்தைப் போல அமெரிக்க கனவுக்கொண்ட ஆஸ்திரேலியர்களையும் பாதித்திருக்கிறது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவில் வாழ எண்ணும் பல வெளிநாட்டினருக்கு ஆதரவான மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியரான Brendon Slattery ஒரு திறன்வாய்ந்த வழக்கறிஞராக இருந்த நிலையில், தனது திறன் ஆஸ்திரேலியாவில் பெரிதும் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு நிகழத்தப்படும் அநீதிகளை அம்பலப்படுத்த உதவும் என எண்ணியிருந்தார். ஆனால், கொரோனா ஏற்படுத்திய சிக்கலினால் அவரே அமெரிக்காவில் சட்டச்சிக்கலில் தவித்தது டிரம்ப் அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கு ஓர் உதாரணம் எனலாம். 

மேற்கு ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் சிறைக்காவலில் உயிரிழப்பது தொடர்பான படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஆவணப்பட உருவாக்கம் தொடர்பாக கற்பதற்கு அமெரிக்கா சென்ற Brendon, எட்டு மாதங்களை கடந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று சூழலில் சிக்கக்கொண்டார். 

கனடாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க கனடா சென்ற அவர், கொரோனா எல்லைக்கட்டுப்பாட்டினால் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 

“திடீரென ஜூலை மாதம், இணையம் வழி மட்டுமே வகுப்புகளைக் கொண்ட வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியது. எனது கல்வியில் பாதியை மட்டுமே கற்ற நான், கனடாவிலிருந்து அமெரிக்கா செல்ல வேறு வழியில்லாமல் சிக்கியிருந்தேன்,” என்கிறார் Brendon.

“ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் செய்தி பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களின் பயணச்சீட்டு செலவு 15,000 டாலர்களை தாண்டியிருந்தது,” என தனது மன அழுத்தத் தருணத்தை குறிப்பிட்டுள்ளார் Brendon. 

இறுதியாக, டிர்ம்ப அரசாங்கத்தின் இம்முடிவுக்கு சவால்விடும் வகையில் 

வழக்குகள் பதிவானதால் Brendon தனது கல்வியை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

அதே சமயம், இந்த வாய்ப்பு அனைத்து விதமான வெளிநாட்டினருக்கும் ஏற்படவில்லை. டிரம்ப் அரசாங்கத்தின் குடியேற்ற எதிர்ப்புப் பார்வை ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை பாதித்தைப் போல ஆஸ்திரேலியர்களையும் பாதித்துள்ளது என்பதே நிதர்சனம்.