அமெரிக்காவின் அமைதியை காக்கும் வகையில்! 70ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் -

செவ்வாய் சனவரி 12, 2021

அமெரிக்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களின் செயலை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்த வன்முறைக்கு தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்டதாக, ட்ரம்ப்பின் "ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம்" கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 70 ஆயிரம் "ட்விட்டர்" கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், அமெரிக்காவில் வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை பகிர்ந்ததால், இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் அமைதியைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக "டிவிட்டர்" நிர்வாகம் தெரிவித்துள்ளது.