அம்மா கலங்காதே நான் மீண்டு வருவேன் !

திங்கள் அக்டோபர் 28, 2019

 அம்மா நான் சுஜித்
அம்மா கலங்காதே
நான் மீண்டு வருவேன் உன் முகம் பார்க்க நினைக்கிறேன் முடியுமா?
கருவறையில் நீ தந்த சுகங்கள் இல்லை
இந்த கல்லறையில் தவிக்கிறேன் யாருமற்ற அனாதையாய்
மெஷின்களின் பேர் அதிர்வும் பெரும் முழக்கங்களும்
என்னை பயமுறுத்துகின்றன -அம்மா
உன் முகம் பார்க்க துடிக்கிறேன் முடியவில்லை
உன் தாய்ப்பால் இன்றி தவிக்கிறேன் அம்மா ..
நான் கருவறையை தான் கண்டேன் -இன்று
கல்லறையை காண்கின்றேன்
பூமித்தாயே நீயும் என் தாயல்லவா நீயும் பெண்ணல்லவா
உன் மகனை மீண்டும் சேர்ப்பாயா ? எங்கும் இருள் அம்மா
இருட்டறையில் அனாதையாய் கிடக்கிறேன்
அம்மா அம்மா என்று கத்திய குரல்கூட கேட்க்குமா உன் காதோரம்
மூச்சு விட முடியவில்லை
கை கால்கள் சோர்ந்து விட்டன
என்னை அணைத்த உன் கைகள் எங்கே
உன் மார்பு மீது சாய்ந்திட தோணுதம்மா
70 மணிநேரம் உயிருக்காக போராடி தவிக்கின்றேன் யாரும் என் அருகில் கிட்டவே வரவில்லை அம்மா
என்னை நெருங்கவே இல்லை
என் கையை கூட தொடவில்லை
என் அம்மாவின் ஆசை முகம் காண
என் அப்பாவின் புன்னகை பார்க்க
துடிக்கிறேன் .. மீண்டும் என் தாயின் மடிமீது உறங்க தவிக்கிறேன்
 இனி என் வாழ்வு உன்கையில் ........ 
மீண்டும் அந்த வரம் தருவாயா பூமித்தாயே ?


கந்தப்பு ஜெயந்தன்